அறத்துப்பால் · இல்லறவியல்

குறள் 222

அதிகாரம்: ஈகை · Giving

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

மூன்று உரைகள்

உரை 1

மு. வரதராசனார்

Mu. Varadarasanar

பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

மு. வரதராசனார் உரை

உரை 2

சாலமன் பாப்பையா

Solomon Pappaiah

நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை

உரை 3

கலைஞர் மு. கருணாநிதி

Kalaignar Mu. Karunanidhi

பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்

கலைஞர் மு. கருணாநிதி உரை

ஆங்கில மொழிபெயர்ப்பு

To beg is bad e'en from the good To give is good, were heaven forbid

விளக்கம்: To beg is evil, even though it were said that it is a good path (to heaven) To give is good, even though it were said that those who do so cannot obtain heaven

உச்சரிப்பு: Nallaaru Eninum Kolaldheedhu Melulakam
Illeninum Eedhale Nandru